“பத்துமுறை கால் இடறி விழுத்தவனுக்கு
பூமித்தாய் முத்தமிட்டு சொன்னாள்-
நீ ஒன்பது முறை விழுந்து எழுந்தவன் என்று”
எனது நண்பர் கவிஞர் ஜெ.ராஜ்குமார் முதல் கவிதை புத்தகத்தை ஆறு மாதங்களுக்கு முன் வெளிட்டார். அதை தொடர்ந்து நான்கு புத்தகங்கள் தயார்படுத்திவிட்டார். முதல் புத்தகத்தை என்னிடம் படிக்க கொடுத்தார் இரண்டு மாதத்திற்கு முன்பு, கவிதை புத்தகம், சிறுகதை, தொடர்கதை, நாவல் படிப்பது சுத்தமாக பிடிக்காத ஒன்று என்றேன். வேறுவழியில்லாமல், பள்ளியில் பாடப்புத்தகம் வாங்குவது போல் வாங்கிக்கொண்டேன்.
பேருந்தின் நீண்ட களைப்பான பயணத்தில் போய்க்கொண்டு இருக்கும்போதே, டிராப்பிக்கில் கண்விழிக்கும்போது, வெளியே ரொம்ப அழகான பெண் தென்பட்டால் சில வினாடிகள் கண்பிதுங்கும் அளவு பார்ப்பதற்கும், மறைந்தபின் கண்ணை மூடி மீண்டும் களைப்பை இழைப்பாருவதற்கும் உள்ள தொடர்புதான் எனக்கும் புத்தகத்திற்கும்.
நேற்று இரவு வெகு நேரம் தூக்கம் வராததால் கண்ணில்பட்டது நண்பரின் "முழுமையான பெண் நீ!" கவிதை புத்தகம், புரட்ட ஆரம்பித்தேன். நிலா, பூ, பெண்மை,மென்மை, இப்படி பெண்களை தூதிபாடும் காதல் வரிகளாகவே பெரும்பாலும் இருந்தது. சினிமாவில் பல கவிஞர்களும் இவ்வாரே!
உடலால் மட்டுமே மென்மையானவர்கள் பெண்கள்(அவர்களும் GYM போக ஆரம்பிச்சிட்டாங்க), உண்மையில் மனதால் மென்மையானவர்கள் ஆண்களே!
ஒருவேளை கவிஞன் பெண்மையை விடாது வருடி எழுதுவது, நிஜ காதலர்களுக்கு அந்த மிகைமையை பிடித்திருக்கலாம், நானும் முயற்சிக்கிறேன் காதலிக்க(கல்யாணத்திற்குபின் என் துணைவியை).
காதலன்+காதலி=மிகைமை
துணைவன்+துணைவி=உண்மை
கவிஞர் ஜெ.ராஜ்குமாரின் மற்ற கவிதை புத்தகங்கள் காதலை தவிர்த்து சமுதாயத்தின் அனைத்து தளங்களையும் கையாண்டுள்ளதாக கூறினார், வாழ்த்துக்கள். இதோ அவர் முதல் புத்தகத்திலிருந்து காதலை தவிர்த்த கவிதைகளில் பிடித்த சில...
வட்டிக்காரப் பொண்டாட்டி
ஆனமேல ஏறிக்கிட்டு ஆணவம் ஆனா - அவ
ஆட்டம் மேல ஆட்டம் போட்டு அடங்காம ஆனா
குட்டி குட்டி போடுமுனு - கந்து
வட்டி வட்டி வாங்கிவந்தாளாம்
கந்து வட்டிக்கார பொண்டாட்டின்னு பீத்திக்கிட்டாளாம்
தினம் உழைச்சி உழைச்சி சாப்பிடற -
மனச ஜாதியில இவ ஒன்னும் இல்லிங்க..
இத நினைச்சி நினைச்சிப் பார்க்கையிலே
ஒன்னும் புரியலைங்க...
மனசாட்சி ஒன்னு இல்லையினு
ஆட்சி செய்யுறா...
இஷ்டத்துக்கும் இம்சைகொடுத்து
கஷ்டப்படுத்துறா...
கேட்டாக்காதான் வாழ்க்கையைத்தான்
புட்டு வைக்கறா...
போகுற காலத்துல நீ என்ன
எடுத்துட்டுப் போறன்னா!
இருக்குற காலத்துல - பணம்
அருகில் இருக்கும்படி செஞ்சிக்கோங்கன்னா!
பணம் இல்லையினா - மனுசனுக்குப்
பினுமுனுதான் பேருனு சொன்னாளாம்!
இத அவ கண்டுபிடிச்சதுனு இல்லையின்னாளாம்
இதுதான் நிஜமென்று சொல்லி முடிச்சாளாம்...!
முதியோர் இல்லம்
மீசை முளைத்தவுடன்
ஆசை வளர்த்துக் கொண்டு
காதல் மோகத்தில் திரிகிறான் இளைஞன்
இது "வாலிப வயசு!"
உண்மைக் காதலென சொல்லிக்கொண்டு
பெற்றோர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கிறான்
மணம் முடிக்கிறான் அவளையே
தினம் தூக்கி வளர்த்த பெற்றோர்களை மறந்து...
இது "கல்யாணப் பருவம்!"
தவமிருந்து பெற்ற பிள்ளை
தனியாகத் தவிக்க விட்டு
தனக்கென வாழ்ந்து கொண்டு
பெற்றோர்களைத் தவிக்க விடுகிறான் -
முதியோர் இல்லத்தில்...
இது "சம்பாத்திய காலம்!"
உடன் இருந்த மனைவியும்
இவன் பெற்ற பிள்ளையும்
அவஸ்தை கொடுக்கும்போது
எண்ணிப் பார்க்கிறான் அவன் -
பெற்றோர்களின் வளர்ப்பை வியப்பாய்...
இது "தாய்மைக் காலம் - தவிப்புக் காலம்!"
இவன் செய்த தவறையே
இவன் மகனும் செய்ய
அப்போது புரிகிறது -
இவன் பொற்றோர்களின் மதிப்பு
எண்ணிப் பார்த்து கொண்டே -
காலத்தைக் கழிக்கிறான்
"முதியோர் இல்லத்தில்!"
கனவு
கண்ணை மூடக் கற்றுக்கொண்ட நான்
கனவை அடக்க கற்றுக் கொள்ளவில்லை...
மற்ற வரிகள் இன்னும் ஆழமானவை எனக்கு நேரமில்லை எழுதுவதற்கு.
முடிவுரையில் நண்பர் கூறியிருப்பது பாசிடிவ் கீற்று,
"ஒரு சிறு தீக்குச்சி
விளக்கை ஏற்றவும் பயன்படும்
விளைச்சலை அழிக்கவும் பயன்படும்,
நான் இதில் முதல் ரகத்தில் இருக்கிறேன்
நீங்கள் அதில் தீபமாக ஜொலியுங்கள்....!
சாரி நண்பரே! தூக்கம் வருகிறது கிளம்புகிறேன்....
உனது ஒவ்வொரு நாள் புதிய முயற்சிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பனே! ( எடுத்ததுமே திட்டக்கூடாது அல்லவா, பொறு மவனே வர்றேன்)
ReplyDeleteஒரு கூட அழுக்க
உடம்புல வெச்சுகிட்டு,
அடுத்தவன் முதுகுல
அழுக்குன்னு சிரிச்சனாம்..
இப்படித்தான் இருக்குதுடா
உன்னோட பொழப்பு..
உன்ன நெனச்சாலே மனசுக்குள்ள
சிரிப்போ சிரிப்பு..
நண்பனோட கவிதைல
காதல் இருந்துச்சாம்..
அத படிச்சு பாத்த பிரகாஷ்க்கு
தூக்கம் வந்துச்சாம்..
நல்லா சொல்றேன் கேட்டுக்கோடா
முட்டாள் நண்பனே!
காதல் இல்லாம மனுஷன் இல்ல
மூட நண்பனே..
( என்னடா சம்மந்தம் இல்லாம என்னென்னமோ எழுதிருக்கான்னு பாக்குறிய? அவரு எவ்வளவு ஆதங்கமா முடிவுரைல சொல்லிருக்கரு.. அதென்னடா.. (சாரி நண்பனே தூக்கம் வருகிறது), அவரு எவ்வளவு அருமையான மெசேஜ் சொல்லிருக்காரு..
உனக்கு தூக்கம் மட்டும் தான் வரும்.. ஆனா உன்னோட வெப்சைட் அ ஓபன் பண்றதுக்கு முன்னாடி நாங்க ஒரு கோர்ட்டர் அடிச்சே ஆகணும்,, இல்லாட்டி எப்படி sahichukirathu. ஆமா வெப்சைட் ஓபன் பன்னுனதிலிருந்து நீ உருப்படியா என்ன சொல்லிருக்க,,கொஞ்சம் கெட்ட வார்த்தை, லவுட்டிட்டு வந்த நாலு கவிதை, அடுத்தவன் படைப்ப கொஞ்சம் கேவலமா விமர்சனம் இத விட வேற என்னடா பண்ணிருக்க/,, இத விட தமிழ்னு ஆரம்பிக்குற அசிங்கமான வெப்சைட் ஒன்னு வந்திருக்காம். சிவனேன்னு அது மாதிரி போயிருடா,,
போடா நண்பா,, உன்ன நெனச்ச எனக்கு பாவமா இருக்குடா..
(சம்மந்தம் இல்லாமல் நான் உன்னை ஏசும் எழுத்துக்களின் பின்னால், உன் அசுர முன்னேற்றத்திற்கான ஆதங்கமும், எதிர்பார்ப்பும் மறைந்துள்ளதை உணர்வாயாக..)
இணையதளம்ல நூத்திகணக்கான எதிர்மறை வாசகர்கள வச்சிருகரவங்களா சந்தோசமா எழுதிட்டு இருக்காங்க.. ஒரே ஒரு நேர்எதிர்மறை வாசகர் நண்பனை வச்சிக்கிட்டு நா படுற அவலம் ச்சிச்சிசீ.....
ReplyDelete