
ஒரு மாதத்திற்கு முன் என் குறும்பட குறுந்தகடை ஆனந்தவிகடனுக்கு அனுப்பிவிட்டு, ஒரு வாரம் கழித்து அதன் முதன்மை நிருபர் நா.கதிர்வேல் அவர்களை கைபேசியில் தொடர்பு கொண்டபோது, குறுத்தகடு கிடைத்துவிட்டது, உங்களை போன்று நிறைய குறுத்தகடு வந்துகொண்டேதான் இருக்கிறது, ஆகவே பத்து நாட்கள் கழித்து பேசவும், நிலவரம் சொல்கிறேன் என்று அலையை துண்டித்துவிட்டார். இருபது நாட்கள் கழித்து மீண்டும் பேசினேன், தலைமை நிருபர் பாரதிதம்பி அவர்களின் கைபேசி எண்னை கொடுத்து பேசுமாறு சொன்னார். நானும் பேசினேன், நேற்றுதான் செலக்ஷன் தேர்வுக்கு அனுப்பயுள்ளோம் தேர்வாகி விட்டதென்றால் அடுத்தவார விகடனில் வரும், வரவில்லையென்றால் தேர்வாகவில்லை என்று அர்த்தம் என்றார்.
இதோ! வந்துவிட்டது, விகடனுக்கு நன்றி.
இசைக்குழு அகம், படத்தொகுப்பாளர் நரேந்தரகுமார், டைட்டில் டிசைனர் சோமசுந்தரம், ஒளிப்பதிவாளர்கள் சந்துரு, மோகன்ராஜ், பாலா, அருண்ராஜ், காளிராசா, மணி மற்றும் நடித்தவர்கள் ஆகியோருக்கு இத்தருணத்தில் என் நெஞ்சார்ந்த நன்றியை சொல்லிக்கொள்கிறேன்.



Stills: சந்துரு, மோகன்ராஜ்.
baba super
ReplyDeleteby a.shankar(www.excelanto.com)