சமீபத்தில் ஒருகுறும்படத்திற்கு பாடலெழுதும் வாய்ப்பை உருவாக்கி கொண்டேன். காரணம், இதற்கு முன்னால் நான் எழுதியதில்லை. தொலைக்காட்சியில் எதாவது ஒரு பாடல் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, நான்கு, ஐந்து அலைவரிசைக்கு தாவி விட்டு திரும்ப வரும்போது அப்பாடல் முடிந்திருக்க வேண்டும். இதன் ஷுச்சாமோ ஒவ்வொருவரின் விருப்பு ரசனை. கானாபாடல், சோகப்பாடல், காதல்பாடல், தத்துவப்பாடல் எதுவாயினும் இசைராகம்,பாடல்வரிகள்,பாடியவரின்குரல், படமாக்கப்பட்ட விதம், இடங்களின் தேர்வு, நடித்தவர்களின் இயற்க்கைதனம், இவற்றில் பெரும்பாலனவை ரசனைக்குட்பட்டால்தான் நம் விருப்பதிற்குரியவையாக இருக்ககூடும்.
அப்படி விருப்பத்திற்கு கொண்டுவர துடித்தவர்களின் உழைப்பு அபாரமானதாகவோ,அளவானதாகவோ இருக்கலாம். வெற்றியோ! தோல்வியோ! இந்த உழைப்பில் நானும் இருந்தேன் என்று மார்தட்டிக்கொள்வதில் மகிழ்ச்சியே! குறும்படமாக இருந்தாலும்.
இதோ இது உருவான பின்புலம், முதலில் கதைக்கேற்ற வரிகள் எழுதினேன், இதற்குமுன் வந்த மற்றவர் வரிகளின் அர்த்தங்களாக இருக்ககூடாது என்ற எச்சரிக்கைவுடன். ஓர் இரவு முழுவதும் வரிகள் என்னை தின்றுவிட்டு விடிய துவங்கியது! யோசித்த குழப்பமோ, விழித்திருந்த களைப்போ இல்லை எழுதிமுடித்த சந்தோசமோ, விடிந்ததும் நான் சூரியனை இரவாக்கினேன்; மறுநாள் ஐந்துபேர் கொண்ட அகம் இசைக்குழுவிற்கு வரிகள் செல்லப்பட்டது. "வரிகள் பலசமயங்களில் கவனிக்கப்படாமல் போகலாம் தேறாத இசையால்". இசைராகம் மனதிற்கு புதுமாதிரியான தோரணையுடன் தேறியவையாகவே இருக்க வேண்டும் என்பதில் அகம் பிடிவாதமாக இருந்தார்கள்.ஒருவாரம் மனதை உருக்கி இசையைஉருவாக்கி கொடுத்துவிட்டார்கள்.

இயக்குனர் இன்னும் பாடல் பிடிப்பதற்கான இடத்தை தேடி அலைந்துகொண்டிருந்தார். பாடல் கிடைத்ததும் உற்சாகத்துடன் பாடல் படபிடிப்பதர்க்கு தயாரானார். உத்வேகத்துடன் ஒளிப்பதிவு செய்ய நண்பர்கள் சந்துரு, மோகன்ராஜ், பாலா, அருண்ராஜ், காளிராசா, ஆட்டோமணி ஆகியோர் இரண்டு நாட்களில் தனிதனியே வெவ்வேறு காட்சிகளை ஒரு குறும்படத்திற்கு!!!!!! ஆறுபேர் ஒளிப்பதிவு செய்தது இதுவே முதல்முறையாக கூட இருக்ககூடும். அதில் நடித்தவர்களின் முக்கிய ஒருபாத்திரம் (சிறுவன், பெரியவன்) மற்றும் குப்பை பொறிகியவர்கள் மூன்றுபேர், போக்குவரத்து காவலாளி, பிளாஸ்டிக் அட்டை கடையில் வேலைபார்ப்பவர் ஆகியோருடன் குடிசைவாழ்பகுதி, சாலையோரஉள்ள ரெடிமேட் உணவுக்கடை, தொங்கும் பாலம் ஆகியவை தங்கள் பங்கினை அளிக்க வேண்டிய நிர்பந்தம்.
நண்பர் மோகன்ராஜ் படத்தொகுப்பு மென்பொருளை இறக்கி இயக்குனர் கையில் கொடுத்துவிட்டார். அதை வைத்து போராடி கொண்டிருத்த சமயத்தில் இயக்குனரின் நண்பர் நரேந்தரகுமார் ஆறு நாட்களில் பாடலுடன் படத்தையும் தொகுத்து முடித்து கொடுத்துவிட்டார். பின்னணி இரச்சல், டப்பிங், இசை இதிலும் இவருடைய பங்கு அலாதியானது.
மொத்தத்தில் என்ன புதுமை என்றால் எல்லோருமே புதியவர்கள், சினிமாவின் தொலைதூர பார்வையாளர்களே! எங்களை களத்திற்கு குதிக்கவைத்தது "உங்களின் ரசனை விருப்பத்திற்கு கொண்டுவர துடிக்கும்" எங்களின் ரசனை ஆர்வமே.
இக் குறும்படத்திற்கு இயக்குனர் அடியனே!
இப்போதெல்லாம் ஷங்கரின் படத்தில் வரும் பாடலை உன்னிப்பாக கவனிக்க ஆர்வமாக உள்ளது. எத்தனை பேர்களின் எத்தனை வருட உழைப்பு.
இதோ எங்கள் குறும்படத்தின் பாடல்
No comments:
Post a Comment