தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு ஒரு வருட முன்பிருத்தே கணிக்க தொடங்கி விடுவார்கள் அடுத்த முதல்வர் யார் என்று, இதில் வார பத்திரிக்கைகளின் பங்கு பிரதானதாக இருக்கும். சென்ற ஆட்சியின் ஓர் அலசல், எதிர் கட்சிகளின் எதிர்நீச்சல், கூட்டணி பலம், இவருடன் இவர் கூட்டணி வைத்தால் வாய்ப்பு, தொகுதி பிரித்தல், தேர்தல் அறிக்கை, மக்கள் கருத்து இப்படி நீண்டுக்கொண்டே இருக்கும் தேர்தல்நாள் வரும் வரை.
தனித்து நின்று டெபாசிட் இழப்பவர், கூட்டணியாக ஒட்டிக்கொள்ளும் சிறுபான்மை கட்சியினர், இவர்களெல்லாம் முதல்வர் போட்டிக்கே தகுதியில்லாதவர்கள். வரும் தேர்தலில் தகுதயுள்ளவர்கள் இரண்டே பேர்தான்.

தமிழ்நாட்டில் பெரும்பாலும் கிராமங்கள்,விவாசயிகள்,ஏழைகள். விவசாயகடன் தள்ளுபடி, மருத்துவ காப்பீட்டு திட்டம், நிலங்களுக்கு இலவச மின்சார இணைப்பு, பள்ளியில் வாரத்திற்கு மூன்று நாட்கள் முட்டை, இலவச திருமண மண்டபம், வேட்டிசேலை, இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, சாக்கடை தெருவெல்லாம் சிமென்ட் சாலை, வீட்டிற்கு வீடு வண்ண தொலைக்காட்சி, மத்திய அரசின் கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் வருடத்திற்கு தொண்ணூறு நாட்கள் வேலை, இப்படி நாம் கட்டிய வரியை மிஞ்சும் அளவுக்கு ஏழைகளின் மனங்களை குளிரவைப்பது சாத்தியமே! ஆனால் சாத்தியபடுத்தியது திராவிட முன்னேற்ற கழகம்.
கிராமத்தில் எனக்கு தெரிந்த ஒரு கிழவி, பள்ளிகூட வாசலில் ரொம்ப வருடங்களாக மிட்டாய், பழங்கள் விற்றுகொண்டிருந்தது, இன்றும் அப்படிதான். என் வீட்டிற்கு வந்து ATM கார்டு ஒன்றை கொடுத்து, 3555 இதன் பின்நம்பர், சென்ற மூன்று மாதம் Government வேலை திட்டத்தில் வேலை செய்த 9000/- ரூபாய் இருக்கும், அதை எடுத்து இந்த Account -இல் போட்டுவிடுமாறு இன்னொரு சேமிப்பு வங்கி புத்தகத்தை கொடுத்தது, நான் விளக்கம் கேட்டு பேசும்போது, City -ல கொத்து கொத்தா சம்பாத்தியம் பண்றாங்க, நான் விக்கிற பழங்களுக்கு ஆஸ்பத்திரிக்கு போகவே சரியாய் இருந்திச்சி, காப்பீடு திட்டத்தால இப்ப அந்த காசு மிச்சமாகுது. கேழ்விறகு குடிச்சிட்டிருந்த காலம் மாறி ரேஷன் அரிசியில மனசார சாப்பிட்டு அதுலேயும் காசு மிச்சமாகுது (கேழ்விறகு 1kg rs.7), வீட்ல என் பேரன் டிவி பாத்துட்டு உலகத்துல நடக்கிற அத்தன விசயத்தையும் ஒப்பிக்கிறான், பள்ளிகூட படிக்கிற என்மகளையும் மருமகனையும் இழந்த என் பேரன் படிச்சு நகரத்துக்கு போய் சம்பாதிச்சி நல்லா இருக்கத்தா.... என்று சொல்லி பெருமிதம் அடைந்த அளவு கண்ணில் அடங்காதது. ஏழைகளின் மனம் வரை எவன் தொடுகிறானோ அவனே முதல்வன்.
மருத்துவர் தன் வாரிசுகளை சிறந்த மருத்துவர்கள் ஆக்கவே விரும்புவர், தொழிலதிபர் தன் வாரிசுகளை சிறந்த தொழிலதிபர் ஆக்கவே விரும்புவர், நடிகன் தன் வாரிசுகளை நடிகனாக்கவே விரும்புகிறான், ஒரு அரசியல் தலைவன் தன் வாரிசுகளை சிறந்த அரசியல் தலைவனாக்குவதில் என்ன தவறு?
தமிழக அரசியலில் கூறுப்போட நிறைய சமாச்சாரங்கள் இருக்கிறது. இப்போதைக்கு எழுதிய தலைப்புக்கோர் முடிவுக்கு வரலாம். இந்தியாவில் கலைஞர் கருணாநிதி போன்ற அனுபவமிக்க அரசியல் தலைவர்களுக்கு அடுத்த தலைமுறையில் அனுபவமிக்க,அறிவுமிக்க தலைவன் மு.க.ஸ்டாலின் என்றால் மிகையாகாது. துணை முதல்வராக இருக்கும் இவர் இன்றும் தன் இணையத்தளத்தில்(www.mkstalin.net) மக்கள் குறைகளை, அரசு அலுவலக ஊழல்களை அனுப்பினால் உடனே நல்ல முடிவுக்கு கொண்டுவருகிறார், ஆட்சி மற்றும் தன் செய்கையின் குறைகளை கேட்டு ஆளும் திறனையும் வளர்த்துக்கொள்கிறார். விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ற நாடு வளர்ச்சியில் அக்கறை கொள்ளும் இத்தளபதியே அடுத்த முதல்வர் என்பதில் ஐயமில்லை.