Monday, August 2, 2010

சொல் கிறுக்கல்கள் பதினாறு

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

மறந்துட்டாயா.....

அடியே பெண்ணே!
மறந்து விட்டாய்
என்றுதானே சொன்னாய்!

இன்னும் என் நினைவில்
ஊறிக்கொண்டுள்ளாயே!

மறந்துவிட்டு சொல்
மறந்துவிட்டேன் என்று
மறந்துவிடுகிறேன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

நான்

தனி மனித வாழ்வில்
அடிப்படை தேவைகள் கூட இல்லாத
ஜீவன்களில் ஒரு ஜீவன் நான்!

பேருந்துகள் ஒதுங்கும்
கூடராமெல்லாம் என் வீடு!

திருமண விழாக்களில் கடைசியில்
மிச்சமாகும் உணவே என் உணவு!

ஊர் உறவினர் இல்லை
பெயரும் இல்லை - மற்றவர்கள்
அழைத்தால்தானே வைப்பதற்கு!
ஜாடையாக
பலர் கூறிக்கொண்டு போவார்கள்
என் தொழில் பெயரை
பிச்சைகாரன் என்று!

கையேந்தும் போதெல்லாம்
சிற்சில மனிதர்கள் போடும் பைசா!
டீ பண்ணுக்கு காலிபண்ணும் என் கல்லா!

எனக்குள் நான்
இறந்து கொண்டே இருந்தேன்
முடியாதவனாகி விட்டோம் என்று!

எல்லோருக்கும் இரண்டு கால்கள்
படைத்த இறைவன் - ஏனோ
எனக்கு மட்டும் ஒரு கால் கூட
படைக்கவில்லை என்பதற்காக!

அரசாங்கத்தில் கஜானா காலி!
இது அரசியல் தலைவர்கள் விளையாடும் ஜாலி!

இந்த அரசாங்கமா ஊண்ட
கோல் தரப்போகிறது! இல்லைவே இல்லை!
காத்திருந்து காத்திருந்து
கண் தேய்ந்ததுதான் மிச்சம்!

வாழ்க்கை துரத்த! வறுமை அடிக்க!
சாவு இழுக்க! பிறப்பு எதற்கு!!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

கஷ்டமாகவுள்ளது

அடியே கண்ணே!
பத்து வருடம்
சிரித்த முகத்தோடு பார்த்துவிட்டு!

உன் அம்மா இறந்ததற்காக
இவ்வளவு கண்ணீர் விடுவதை பார்த்தால்
எனக்கே கஷ்டமாகவுள்ளது!

சரி என்று சொல்
பத்தே மாதத்தில்
உன்னை அம்மவாக்குகிறேன்!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

கருப்பு

கருப்பாய் இருக்கும் பெண்களை
பார்க்கும்போதெல்லாம் உன் ஞாபகம்!

இது உன் நிறத்தின் மவுசா!
இல்லை உன் நிறத்தால் ஏற்பட்ட என் மனசின் ரவுசா!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஏக்கம்

தண்டவாளத்தை போலவே,
கோடிகளில் வாழும் மிருகங்களின் உச்சகட்ட கோடும்!
வறுமையில் வாடும் மனிதர்களின் உச்சகட்ட கோடும்!
இணையாமல் நீண்டு கொண்டே செல்கிறது,
நடுவே குறுக்கும் நெடுக்குமாய் இருக்கும்
நடுத்தர வர்க்கத்தின் ஏக்கத்தை மட்டும் வைத்து என்ன செய்ய?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

வலிக்கும் மாமே

மனம் பூ போன்றது
காட்டிவிடாதே பெண்ணிடம்!

பூவை பிடிங்கி
முள்ளை குத்திவிடுவார்கள்!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

அதிஷ்டகாரி அம்மா

அவள் வயது முப்பது
ஒட்டிய நிறம் வெள்ளை!
ஒட்டாத நிறம் சிவப்பு!

மணமான ஐந்து வருடத்தில்
கடைசிவரை குடிபோதையில்லாமல்
பார்த்த நாளில்லை அவள் கணவனை!

அவள் துரதிஷ்டம் குழந்தை பாக்கியம்
கடைசிவரை கிட்டவில்லை!

மஞ்சள் கழிவை அகற்றினாள்
குளிப்பாட்ட வைத்தாள்
மருந்து பரிமாறினாள்
இருசக்கர நாற்காலியில் அமரவைத்து
வீட்டை சுற்றி வளம்வந்தாள்
படுக்கை அறையில் தூங்க வைத்தாள்
இன்னும் வைத்துக்கொண்டுஉள்ளாள்
கை கால் விழங்காத அம்மாவை!
அம்மாவிற்கு தாயாக!
அதிஷ்டகாரி அம்மா!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

காத(அ)ழி

என்னையே மாற்றினாள்!
என்னை ஏன் மாற்றினாள்!!
என்னை ஏமாற்றினாள்!!!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

அழகில்லை

அவள் கண்கள் அழகுதான்
என்னை முறைத்தபோதும்!
அவள் உதடுகள் அழகுதான்
என்னை திட்டியபோதும்!
அவள் கைகள் அழகுதான்
என்னை அடித்தபோதும்!
அவள் உள்ளம் மட்டும் அழகில்லை
என்னை மறந்தபோது!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

மனித(எம்)மதம்

பிறந்த மேனியாக வந்து
ஆடை அலங்காரம் செய்து
வாழ்க்கை என்ற படுக்கையை விரித்து
கர்வம் என்ற போர்வையை போத்தி
மதம் என்ற குறட்டையை உறும்புகிறாயே!
பூமி என்ற சவப்பெட்டியில்
உன் திறந்த மேனி கூட
சாம்பலாக மிஞ்சப்போவதில்லை!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

சங்கிலி

சிறகடித்த பறவைகளை எல்லாம்
சிறைபிடித்து கைதியாக்கியது கல்யாணம்!

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

டைரி

தோல்வியின் பக்கங்களில்
வெற்றிக்காக பக்கம் ஏதும் தென்படவில்லை!

ஆனால்
வெற்றியின் பக்கங்களில்
தோல்வியின் அனைத்து பக்கங்களும் தென்பட்டன!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஓர் விலைமாது விடியலைத்தேடி

பிழைப்பதற்காக
பிள்ளைகளுக்காக
ஓர் தொழில்!

வருமானம் குறைந்துவிட்டது
அனுபவம் வருடங்களானதால்
என்பாள் மனதுக்குள்!

வீடுண்டு!
காலமாகிய கணவனில்லை!
மூன்று மகள்கள் உண்டு!
உறவினர்கள் இல்லை!

விலையாகி வளர்க்கிறாள் மகள்களை
கல்விக்காக பள்ளி விடுதியில் தங்கவைத்து!
சிந்திய கண்ணீரை நிரப்பியிருந்தால்
ஒரு ஏரியே உருவாயிருக்கும் என்பாள் மகள்களிடம் - "ஓர்
வேசி விதவை தாயின் மனநீர்"

பச்சிளம் வந்த பாதையை
பலரை பதம் பார்க்கவிட்டு
பணத்தை எண்ணிக்கொண்டாள் பச்சிளத்திற்காக...

அவளின்
பல இரவுகள் பகலானதால்
ஒருநாள்
சூரியன் விழிக்கையிலே
அவள் இரவானாள்!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

டி ஆர் பாணிங்கோ

காதலிக்க நான் செய்தேன் முயற்சி!
அதனால் மேற்கொண்டேன் பயிற்சி!
அவளை காணும்போதெல்லாம் அடைந்தேன் கிளர்ச்சி!
என் பார்வை பட்டாலோ அவளுக்கோர் அலர்ஜி!
இது ஒரு தலை காதலின் வளர்ச்சி!
அதனால் என் மனம் அடைந்ததோ தளர்ச்சி!
இக்காதல் என் வாழ்க்கைக்கோர் இகழ்ச்சி!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ்(படம்) காதல் கவிதை

சின்ன பசங்க நாங்க என்று களவாடிய பொழுதுகள் தொலைந்து
16 வயதினிலே எட்டியதும் மனதில் தோன்றியது
துள்ளி திரிந்த காலமாம் காதல் காலம்
அச்சமயத்தில் அழகிய லைலாவாக
ஒரு புதுமை பெண்ணை சந்தித்தேன்
என்னவளே என்று ஆசையாக பலமுறை
கலர் கனவுகள் கண்டேன்
அவள் வருவாளா என்ற எதிர்பார்ப்பில்
நேருக்கு நேர் சந்தித்தேன்
பூவே உனக்காக என்று கொடுத்த ரோஜா இதழை
அவளோ புரியாத புதிராக மாற்றினாள்
காலமெல்லாம் காத்திருந்து காதலுக்கு மரியாதை கொடுத்து
காதலே நிம்மதி என்று எண்ணிய காதல் கோட்டையை
அவளோ லவ் டுடே வாக மாற்றினாள்
எனினும் காலமெல்லாம் காதல் வாழ்க!
என்றும் அன்புடன் அந்நியன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

உணவு போல் காமம்

பசியெடுக்கும்
ருசிகேக்கும்
மீண்டும் தொடரும்....

---------------------------------------------------------------------------------------------------------------------------------